தொழுகையில் இறுதி தஷஹ்ஹுத் ஒதியதன் பின் ஸலாம் கொடுப்பதற்கு முன் நான்கு விடயங்களிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடக்கூடியவராக இருந்தார்கள். எனவே நாமும் அவற்றிலிருந்து பாதுகாப்புத் தேடி பிராத்திக்க வேண்டும் என்றும் எமக்கு கட்டளையிடுகிறார்கள். முதலாவது: கப்ரின் வேதனை இரண்டாவது: மறுமை நாளின் நரக வேதனை. மூன்றாவது: உலக வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை : அதாவது உலக வாழ்வின் சோதனை என்பது உலகில் தடைசெய்யப்பட்ட ஆசைகள் மற்றும் வீணான சந்தேகங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். மரணத்தின் சோதனை மரணத் தருவாயில் இஸ்லாத்ததை விட்டு விலகிச் செல்லுதல் அல்லது ஸுன்னாவிலிருந்து தடம்புரலுதல் அல்லது கப்ரில் நிகழும் இருமலக்குகளின் விசாரணை குறித்த சோதனை போன்றவற்றைக் இது குறிக்கும். நான்காவது : மறுமை நெருங்குகையில் இறுதிக் காலத்தில் வெளிப்படும் தஜ்ஜாலின் சோதனை : இவனால் அடியார்கள் அதிகம் சோதனைக்குள்ளாவார்கள். அந்நேரத்தில் அவனின் சோதனையும் வழிகெடுப்பும் மிகவும் உச்ச நிலையில் இருப்பதாலே இங்கு விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.