இந்த மகத்தான திக்ரை ஒவ்வொரு கடமையான தொழுகைளிலும் ஸலாம் கொடுத்ததன் பின் ஓதி தஸ்பீஹ் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். இதன் கருத்து பின்வருமாறு : 'லாஇலாஹ இல்லல்லாஹு' என்ற வார்த்தை உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாறுமில்லை என்பதைக் குறிக்கும். 'வஹ்தஹு லா ஷரீகலஹு'அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை, என்பது (இறைமைத்துவத்திலும்) உலூஹிய்யாவிலும், ருபூபிய்யாவிலும் பெயர்கள் மற்றும் பண்புகளிலும் தனித்துவமானவனாகவும், பிற படைப்புகளுடன் கூட்டுச்சேராதவனாகவும் உள்ளான் என்பதாகும். 'லஹுல் முல்க்' வானங்கள் மற்றும் பூமி அதற்கிடைப்பட்ட அகன்று விரிந்த ஆட்சியதிகாரத்திற்கு சொந்தக்காரன் என்பதைக் குறிக்கும். 'வலஹுல் ஹம்து' என்பது ஒட்டுமொத்தமான முழுமைத்துவத்தைப் பெற்றவன் இன்பத்திலும் துன்பத்திலும் மற்றும் எல்லா சூழ்நிலைகளிலும் நேசித்து போற்றி புகழத்தக்கவன் என்பதாகும். 'வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்' அவனின் சக்தியும், வல்லமையும் எல்லா வகையிலும் முழுமையானது, அவனுக்கு இயலாதது என்று ஒன்று கிடையாது, அனைத்தும் அவனுக்கு இயலுமான விவகாரங்களே என்பது இதன் பொருளாகும். ' லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ்' என்பது ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறிச்செல்லவதோ, அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் நிலையிலிருந்து அவனுக்கு கட்டுப்படும் நிலைக்குச் செல்வதற்குமான ஆற்றலைப் பெறுவது அல்லாஹ்வின் மூலமேயாகும், அவனே இதற்கு உதவிபுரிபவனாக உள்ளான். அவனின் மீதே எமது பொறுப்புகளை நாம் ஒப்படைக்கிறோம். ' லாஇலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு' என்ற வாசகம் இணைவைத்தலை புறக்கணித்து உலூஹிய்யாவை வலியுறுத்துவதாக இது அமைந்துள்ளது. அவனைத் தவிர வணங்கி வழிபட தகுதி படைத்தவன் வேறு யாரும் கிடையாது. 'லஹுன்னிஃமது வலஹுல் பழ்லு' "அருளும் அருட்கொடைகளும் அவனுக்கே உரியன" என்பது அருள்களைப் படைத்து அதனை அவனே சொந்தமாக்கி கொள்வதோடு அவற்றை நாடிய அடியார்களுக்கு கொடுத்து கண்ணியப் படுத்துகிறான் என்பதாகும். ' வலஹுஸ்ஸனாஉல் ஹஸன்' அழகிய பாராட்டும், புகழும்' அவனுக்கே உரியன என்பது இந்தப்பாராட்டு அவனின் தாத் -மெய்நிலை- மற்றும் அவனின் பண்புகள் செயற்பாடுகள் அருட்கொடைகள் மற்றும் எல்லா நிலைகளுக்குரித்தாகும். 'லாஇலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன' என்பதன் கருத்து : அல்லாஹ்வுக்கு வழிப்படுவதில் எவ்வித முகஸ்துதியோ, வெளிப்பகட்டோ இன்றி அல்லாஹ்வை மாத்திரம் நோக்காகக் கொண்டு தூய்மையைக் கடைப் பிடித்தலைக் குறிக்கிறது. 'வலவ் கரிஹல் காபிரூன்' அதாவது காபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ்வை ஏகத்துவப் படுத்தி அவனுக்கு வணக்கங்களை செலுத்துவதில் நிலைத்திருப்போம் என்பதாகும்.