ஆஇஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் நபியவர்களுக்கு அருகாமையில் உறங்கிக் கொண்டிருந்தேன். திடீரென இரவில் அவர்களைக் காணவில்லை. அப்போது, அவர்கள் அறையில் இரவுத் தொழுகை தொழும் இடத்தைத் தொட்டுப் பார்த்தேன். அங்கு இரு பாதங்களும் நேராக இருக்க, அவர்கள் ஸுஜூதில் இருந்துகொண்டு, இவ்வாறு கூறிக்கொண்டிருந்தார்கள்: “நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்” (அதாவது பாதுகாக்குமாறு உதவி தேடுகின்றேன்) “உன் திருப்தியைக் கொண்டு உனது கோபத்தை விட்டும்” (என் மீதோ, எனது சமுதாயம் மீதோ நீ கோபப்படுவதை விட்டும்) உன்னிடமுள்ள ஈடேற்றத்தைக் கொண்டு (உனது அதிக மன்னிப்பைக் கொண்டு) உன் தண்டனையை விட்டும் “உன்னைக் கொண்டே, உன்னை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன்.” (உனது அழகு, மற்றும் கண்ணியத்தின் பண்புகளைக் கொண்டு. நீயே உன்னை விட்டும் பாதுகாப்பாய். அல்லாஹ்விடமிருந்து தப்பி ஒதுங்குவதற்கான இடம் அவனிடத்தைத் தவிர வேறில்லை). “என்னால் உன்னைப் புகழ்ந்து முடிக்க முடியாது”. (நான் எவ்வளவு முயற்சித்தாலும், உனது பேருபகாரங்களையும், அருட்கொடைகளையும் என்னால் அளவிட முடியாது என்பதால், உனக்குத் தகுதியான அளவு உன்னைப் புகழ்ந்து முடிக்கவும் இயலாது.) “நீ உன்னைப் புகழ்ந்தது போல” நீ மாத்திரமே உனக்குப் பொருத்தமான விதத்தில் உன்னைப் புகழ்ந்துள்ளாய். எனவே, யாரால் உன்னைப் புகழும் கடமையை சரிவரநிறைவேற்றமுடியும்?