இறைநம்பிக்கையாளர்களின் தாயார் ஆஇஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: அல்குர்ஆனின் (110) ம் அத்தியாயமான இதா ஜாஅ நஸ்ருல்லாஹ் நபியவர்களுக்கு அருளப்பட்டபோது அதில் உள்ள வசனமான ( எனவே உமது இறைவனின் புகழைப் போற்றி, அவனிடம்; மன்னிப்புக் கோருவீராக) என்ற வசனத்தின் கட்டளையின்படி செயல்பட விரைந்தார்கள், அதனால் அவர்கள் தொழுகையில் ருகூஉ மற்றும் ஸஜ்தாவிலும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து பாவமன்னிப்புக் கோரினார்கள் அந்த வாசகத்தின் தெளிவுரை வருமாறு : , 'ஸுப்ஹானக' (உமக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாத குறைகள் அனைத்தை விட்டும் தூய்மைப்படுத்தி உன்னை நான் புகழ்கிறேன்;) 'அல்லாஹும்ம ரப்னா வ பிஹம்திகா' (எங்கள் இறைவனே, உம்மைப் புகழ்ந்து துதிக்கிறேன்;, உம்முடைய தனித்துவம், பண்புகள் மற்றும் செயல்களுக்குத் தகுதியான எல்லா வழிகளிலும் உம்மைப் போற்றி புகழ்கிறேன். எனவே 'அல்லாஹும்ம இக்ஃபிர் லி' (யா அல்லாஹ்! என்னை மன்னித்து, என் பாவங்களை நீக்கிவிடுவாயாக). இந்த வாசகத்தை அதிகம் ருகூவிலும் ஸஜ்தாவிலும் அதிகமதிகம் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.