நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ருகூஇலிருந்து தனது முதுகை உயர்த்தினால் 'ஸமிஅல்லாஹுலிமன்ஹமிதஹ் என்று கூறுவார்கள். இதன் கருத்து : யார் அல்லாஹ்வை புகழ்கிறானோ அவனுக்கு பதிலளிப்பதோடு அவனின் புகழை ஏற்று அதற்கு கூலியும் வழங்குகிறான் என்பதாகும்'. 'அல்லாஹும்ம ரப்பனாலகல் ஹம்து மில்அஸ் ஸமாவாதி வமில்அல் அர்ழி வமில்அ மாஷிஃத மின் ஷையின் பஃது ' என்பது வானங்கள் மற்றும் பூமி அதற்கிடைப்பட்டவை அவன் நாடிய எல்லாவிடயங்களில் அவனின் புகழ்நிறைந்துள்ளது என்பாகும்.