முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வாகனத்தின் மீது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பின் அமர்ந்திருந்தார்கள் அப்போது நபியவர்கள் தான் கூறுப் போகும் விடயத்தின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்த 'முஆதே!' என மூன்று தடவை அழைத்தார்கள். ஓவ்வொரு தடவையும் நபியவர்கள் அழைக்கும் போதெல்லாம் அல்லாஹ்வின் தூதரே! அப்படியே ஆகட்டும், அல்லாஹ்வின் தூதரே உங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு உங்களுக்கு கட்டுப்பட்டவனாக உள்ளேன். உங்களுக்கு கட்டுப்படுவதினால் நான் மகிழ்ச்சியை தேடுகிறேன் என்று கூறிக்கொண்டிருந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யார் ஒருவர் உண்மையாக வணங்கப்படத்தக்கவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லையென்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் பொய்யாக அல்லாமல் உள்ளத்தாள் உண்மைப் படுத்தியவராக சாட்சி கூறி அதே நிலமையில் மரணிக்கிறாரோ அவர் மீது நரகத்தை ஹராமாக்கி விடுகிறான் என்று இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு நபியவர்கள் கூறவே முஆத் ரழியல்லாஹு அன்ஹு; இந்த செய்தியை மக்களி டம் அவர்கள் மகிழ்ச்சியடையவும், நல்ல சுபச் செய்தியாக அமைந்துவிடவும் இதனை நான் அறிவிக்கட்டுமா எனக் கேட்டார்கள். நபியவர்கள் மக்கள் இதிலேயே நம்பிக்கொண்டு அலட்சியமாக இருந்து அவர்களின் அமல்களெல்லாம் குறைந்து விடும் என அஞ்சினார்கள். எனவே முஆத் அவர்களும் அறிவை மறைத்த குற்றத்திற்கு உட்பட்டு விடுவதைப் பயந்து தனது மரணத்திற்கு முன்தான் இந்த ஹதீஸை அவர்கள் கூறினார்கள்.