இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு சிறுவராக இருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் சவாரி செய்கையில் நான் உமக்கு பயனுள்ள சில விடயங்களை கற்றுத் தரப்போகிறேன், அல்லாஹ் அதனை பயனுள்ளதாக ஆக்கித்தர வேண்டும் என அவரிடம் கூறினார். அல்லாஹ்வின் ஏவல்களைப் பேணி விலக்கள்களை தவிரந்து நடப்பதன் மூலம் அல்லாஹ்வை பேணி நடப்பீராக. அதாவது உன்னை அவன் வழிபாட்டிலும் வணக்கங்களிலும் காண வேண்டும். பாவத்திலும் குற்றங்களிலும் காணக்கூடாது. அவ்வாறு நடந்து கொண்டால் உம்மை அல்லாஹ் இம்மை, மறுமை பேராபத்திலிருந்து பாதுகாப்பது உமக்கு அல்லாஹ்வால் வழங்கப்படும் கூலியாக அமைந்துவிடும். அதே போல் நீ எங்கு சென்றாலும் உமது காரியங்களில் அவன் ஒத்தாசை வழங்குவான். நீ ஏதாவது ஒன்றை கேட்டால் அல்லாஹ்விடமே கேள், அவன்தான் கேட்போரின் கோரிக்கைகளை ஏற்று பதிலளிப்பவனாக உள்ளான். உமக்கு உதவி தேவைப்பட்டால் அல்லாஹ்விடம் மாத்திரமே உதவி கோருவீராக. ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உமக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் உமக்கு அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் அவர்களால் செய்திட முடியாது. இன்னும் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உமக்கு ஏதாவது தீங்கிழைக்க முயன்றாலும் அல்லாஹ் உமக்கு ஏற்கனவே குறித்து வைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தக் தீங்கையும் அவர்களால் செய்திட முடியாது என்ற ஆழமான நம்பிக்கை கொண்வராக இருப்பீராக! இந்த விவகாரத்தை அல்லாஹ் அவனின் அறிவிற்கும், ஞானத்திற்கும் ஏற்ப அவனே தீர்மானித்து எழுதிவிட்டான். ஆகவே அவனால் விதித்து எழுதப்பட்டவற்றை மாற்ற முடியாது. அல்லாஹ்வின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும், அவனது தடைகளைத் தவிர்ப்பதன் மூலமும் எவர் அல்லாஹ்வைப் பாதுகாக்கிறாரோ, அப்போது அல்லாஹ், தன் அடியாரின் முன் இருந்து, அவனுடைய நிலையை அறிந்து உதவி செய்து அவனுக்கு எல்லா வகையிலும் ஒத்தாசையாக இருக்கிறான். ஒருவன் செழிப்பான- வசதியாக இருக்கும்- நிலையில் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அல்லாஹ் கஷ்டமான காலங்களில் அவனுக்குரிய விடிவையும், கஷ்டத்திலிருந்து வெளியேறுவதற்கான வழியையையும் ஏற்படுத்துவான். ஒவ்வொரு அடியானும் அல்லாஹ் அவனுக்கு விதித்த நன்மை தீமைகளில் திருப்தி அடையட்டும். கஷ்டங்கள் மற்றும் துன்பமான நிலைகலில் , அடியான் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் ஏனென்றால் பொறுமைதான் விடிவுக்கான திறவுகோலாகும் துன்பம் கடுமையாகும்போது, அல்லாஹ்விடமிருந்து விடிவு கிடைக்கும், கஷ்டம் ஏற்பட்டால் அதனைத் தொடர்ந்து அல்லாஹ் இலகுவை ஏற்படுத்தித் தருவான்.