நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து கேட்பவற்றை எழுத்து மூலம் பாதுகாப்பதற்காக பதிவு செய்துகொள்பவனாக இருந்தேன். அப்போது குறைஷியர்களில் சிலர் என்னை எழுத வேண்டாம் எனத்தடுத்துவிட்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சாதாரண நிலையிலும் கோபத்திலும் பேசும் ஒரு மனிதராவர், அவர்கள் சில வேளை தவறிழைக்கக் கூடும் எனக் கூற நான் எழுதுவதை நிறுத்திக்கொண்டேன். எனவே அவர்கள் கூறியதை நபி எஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கூறினேன். அதற்கு நபியவர்கள் தனது வாயை பெரும் விரலால் சுட்டிக்காட்டி எழுதுவீராக எனக் கூறிவிட்டு எனது ஆன்மா யாரின் கைவசம் உள்ளதோ அவனின் மீது சத்தியமாக கோபம் மற்றும் எல்லா நிலைகளிலும் இதிலிருந்து வெளிப்படும் அனைத்தும் சத்தியமாகும் எனக் கூறினார்கள். அல்லாஹ் தனது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறான்: 'அவர் மனோ இச்சைப்படி எதனையும் பேசுவதில்லை. அது அவருக்கு அறிவிக்கப்படும் வஹியைத் தவிர வேறுஎதுவுமில்லை' ( அந்நஜ்ம்: 3-4)