இந்த ஹதீஸில், இரு முஸ்லிம்கள் தமது வாட்களினால் மற்றவரை கொலை செய்து அழித்து விட வேண்டும் என்ற நோக்கில் சந்தித்துக் கொண்டால் கொலைசெய்தவர் தனது தோழரை கொலை செய்யதன் காரணமாக நரகம் செல்வார் என இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அத்துடன் கொலைசெய்யப்பட்டவரும் நரகம் செல்வார் எனக் குறிப்பிட்டது நபித்தோழர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது அதனால் நபியவர்கள் கொலைசெய்யப்பட்டவர் எப்படி நரகில் இருப்பார் என வினவினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தனது தோழரை கொல்ல வேண்டும் என்ற ஆவலுடனே அவரும் மோதினார். ஆனால் கொலை செய்தவர் மிகவிரைவாக செயற்பட்டு அவரை முந்தி கொலை செய்து விட்டார் என விளக்கமளித்தார்கள்.