நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது சமூகத்திற்கு நன்மைகளை அழிக்கும் ஏழு பெரும் குற்றங்களை விட்டும் தூரமாகுமாறு ஏவுகின்றார்கள். அவை பற்றிக் கேட்கப்பட்ட போது அவற்றைப் குறித்து பின்வருமாறு தெளிவு படுத்தினார்கள். முதலாவது: அல்லாஹ்விற்கு நிகராக எவ்விதத்திலாவது இணையாளர்களை ஏற்படுத்துவதன் மூலம் இணைவைத்தல். மேலும் வணக்கவழிபாடுகளில் ஏதாவது ஒன்றை அல்லாஹ்வுக்கும், அல்லாஹ் அல்லாதவற்றிற்கும் செலுத்துதல் ஷிர்க்காகும். இது மிகப்பெரும் பாவமாதலால் அதனை கொண்டு ஆரம்பித்துள்ளார்கள்;. இரண்டாவது :சூனியம் செய்தல். சூனியம் என்பது முடிச்சுகள், மந்திரங்கள், மருந்துகள், புகை ஆகியவற்றைக் குறிக்கும். இவை சூனியம் செய்யப்பட்டவரின் உடலில் அவர் கொல்லப்படுவதன் மூலமோ அல்லது நோய் ஏற்படுவதன் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அல்லது கணவன் மனைவிக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தலாம். இது ஒரு ஷைத்தானிய செயலாகும். இவற்றில் பெரும்பாலனவை இணைவைத்தல் மற்றும் தீய ஆவிகள் விரும்பும் ஒன்றைக் கொண்டு மட்டுமே அடைய முடியும். மூன்றாவது: ஆட்சியாளரால் நடைமுறைப் படுத்தப்பட்ட ஒரு நியாயமான காரணத்தைத் தவிர, இறைவன் தடைசெய்த ஆன்மாவைக் கொல்வது. நான்காவது: வட்டியை சாப்பிடுதல், அல்லது ஏதோ ஓரு வகையில் பயன்பெரும் விதத்தில் வட்டியை பயன்படுத்தல். ஜந்தாவது: பருவவயதை அடையாத நிலையில் தந்தையை இழந்த குழந்தையின் சொத்தில் அத்துமீறி நடந்து கொள்ளுதல்.(அளவு கடந்து அனுபவித்தல்). ஆறாவது : காபிர்களுடனான போரில் புறமுதுகுகாட்டி ஓடுதல். ஏழாவது: கற்புள்ள சுதந்திர பெண்களின் மீது விபச்சார பழிசுமத்துதல். அதே போன்று ஆண்கள் மீது வீண் பழி சுமத்துவதும் இதில் உள்ளடங்கும்.