கண்பார்வையற்ற ஒரு மனிதர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து அல்லஹ்வின் தூதரே ஐவேளைத் தொழுகைகளுக்கு என்னை பள்ளிவாயிலுக்கு அழைத்து வர எனக்கு உதவியாளர் எவரும் இல்லை என்று முறைப்பட்டார்கள். அதாவது அவர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் ஜமாஅத்துடன் தொழாது தனித்து வீட்டிலேயே தொழுவதற்கு சலுகை தருமாறு வேண்டிக்கொள்ளவே அதற்கான அனுமதியை வழங்கினார்கள். பின் அவர் திரும்பி செல்லவே அவரை அழைத்து தொழுகைக்கான அதான் -அழைப்புச் சத்தம் உமக்குக் கேட்கிறதா என்று கேட்டார்கள். அதற்கு ஆம் என அவர் பதில் கூற, அவரிடம் தொழுகையின் அழைப்பாளருக்கு பதிலளிப்பீராக அதாவது பள்ளிக்கு வந்து ஜமாஅத்தில் கலந்து கொள்வீராக என்று கூறினார்கள்.