ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுப்ஹ் தொழுவித்து விட்டு 'இன்னார் எமது இந்தத் தொழுகையில் கலந்து கொண்டுள்ளாரா? என்று விசாரித்தார்கள். அதற்கு ஸஹாபாக்கள் இல்லை என்று கூறினார்கள். பின்னர் இன்னொருவரைக் குறித்தும் அவர் வந்துள்ளாரா? என்று கேட்டார்கள். அதற்கும் ஸஹாபாக்கள் இல்லை என்று பதில் கூறினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : சந்தேகத்திற்கு இடமின்றி, பஜ்ர் மற்றும் இஷா தொழுகைகள் நயவஞ்சகர்களுக்கு மிகவும் கடினமானவை, ஏனெனில் இந்த இரண்டு நேரங்களிலும் சோம்பேறித்தனம் மேலோங்கி நிற்கிறது, மேலும் இருள் காரணமாக யாரும் பார்க்க முடியாததால் நயவஞ்சகத்திற்கான –முகஸ்துதிக்கான- வாய்ப்பு குறைகிறது. முஃமின்களே! ஸுப்ஹ் மற்றும் இஷா தொழுகைகளுக்கு எவ்வளவு கூடுதல் வெகுமதியும் கூலியும் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருந்தால், (ஏனென்றால் முயற்சியின் அளவைப் பொறுத்து கூலியின் -நன்மை- அதிகரிக்கப்படுகிறது), நீங்கள் இந்த இரண்டு தொழுகைகளிலும் தவழ்ந்து வந்தாவது கலந்து கொள்வீர்கள் . உண்மையில், இமாமுக்கு அருகில் முதல் வரிசையில் இருப்பது அல்லாஹ்வுக்கு பக்கத்தில் மலக்குகள் இருக்கும் வரிசையைப் போன்றது. முஃமின்கள் முதல் வரிசையின் சிறப்பு என்ன என்பதை அறிவார்களாயின் உண்மையில் அவர்கள் போட்டி போட்டுக் கொள்வார்கள். ஒருவர் தனியாகத் தொழுவதை விட, மற்றொரு நபருடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழுவது அதிகம் நன்மையை பெற்றுத்தரக்கூடியது. மேலும் ஒருவர் தனியாகத் தொழுவதை விட, இருவருடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழுவது மிகவும் சிறந்தது. தொழுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் தொழுகை அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானதும் சிறந்ததுமாகும்.