நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸாபித் இப்னு கைஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை சபையில் காணவில்லை அதனால் அவரைப் பற்றி விசாரித்தார்கள். அப்போது ஒரு மனிதர் நான் அவர் பற்றிய செய்தியையும் அவர் சபைக்கு சமூகம் தராததிற்கான காரணத்தையும் அறிந்து வருகிறேன் என்று கூறிவிட்டு ஸாபித் இ்னு கைஸிடம் சென்றார் அவரே, தலையை கவிழ்த்த நிலையில் சோகத்துடன் அவரின் வீட்டில் இருப்பதைக் கண்டார். பின்னர் அவரிடம் உமக்கு என்ன நேர்ந்தது எனக் கேட்க அவருக்கு பெரும் நாசம் -தீங்கு – ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். அதாவது தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சப்தத்திற்கு அதிகமாக தனது குரலை உயர்த்திப் பேசுகிறேன்;,அவ்வாறு குரலை உயர்த்திப்பேசுவோரின் அமல்கள் அழிந்து போவதாக அல்லாஹ் எச்சரித்துள்ளான் ஆகையால் எனது அமல்கள் வீணாகி நான் நரகவாதிகளுள் ஒருவனாக மாறிவிட்டேன் என்று அவரிடம் கூறினார் அதன் காரணமாகவே இவ்வாறு கவலை தோய்ந்த நிலையில் உளளேன் என்றார். உடனே அந்த மனிதர் நபியவ்களிடம் வந்து அவர் கூறியதைத் தெரிவித்தார். அதற்கு நபியர்கள் ஸாபித் அவர்களிடம் உடன் திரும்பிச் சென்று அவர் நரகவாதியல்ல என நற்செய்தியை அவரிடம் கூறிவிடு எனப் பணித்தார்கள். காரணம் அவரின் சப்தம் அதிகமாக இருப்பது அவரின் இயற்கையில் அமைந்த விடயம். மேலும் அவரே அல்லாஹ்வின் தூதர் அவர்களினதும், அன்ஸரிகளினதும் பேச்சாளராகத் திகழ்ந்தார்கள்.