மறுமை நாளில் சுவர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ எவரும் சில விடயங்கள் குறித்து விசாரிக்கப்படும் வரை விசாரணை மன்றத்தை தாண்டி செல்ல முடியாது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். முதலாவது : மனிதனின் வாழ்வு குறித்தாகும.; தனது வாழ்க்கையை எவ்வாறு கழித்தான்? என்பது பற்றியதாகும் இரண்டாவது : தனது அறிவு பற்றியதாகும் அதனை அல்லாஹ்வுக்காக கற்றானா? அதன் படி செயல்பட்டானா? அக்கல்வியை தகுதியானவர்களுக்கு எத்திவைத்தானா? போன்ற கேள்விகள் அவனிடம் கேட்கப்படும். மூன்றாவது: தனது செல்வம் குறித்தாகும். அதாவது செல்வத்தை எவ்வழியில் சம்பாதித்தான் ஹலாலான முறையிலா அல்லது ஹராமான முறையிலா ? அவ்வாறு சம்பாதித்த செல்வத்தை அல்லாஹ் விரும்புகின்ற விடயத்திலா அல்லது அல்லாஹ் விரும்பாத விடயத்திலா செலவு செய்தான் போன்ற கேள்விகள் அவனது செல்வம் குறித்து கேட்கப்படும். நான்காவது : உடல் பற்றியதாகும் அதாவது அவனின் பலத்தையும், ஆரோக்கியத்தையும் அதன் வாலிபப்பருவத்தையும் எவ்வாறான விடயங்களில் ஈடுபடுத்தினான்? என்பது பற்றி கேள்வியாகும்