பின்வரும் வசனமான, (ஸும்ம லதுஸ்அலுன்ன யவ்மஇதின் அனின் நஈம்) அதாவது உங்களுக்கு அளித்த அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றி செலுத்தியது குறித்து உங்களிடம் மறுமையில் விசாரிக்கப்படவிருக்கிறீர்கள் என்ற வசனம் இறங்கியபோது அஸ்ஸுபைர் இப்னுல் அவ்வாம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எந்ந அருட்கொடைபற்றி நாம் விசாரிக்கப்படப் போகிறோம்? அதாவது ஈத்தம் பழம் மற்றும் நீர் ஆகிய விசாரிக்கப்படுவதற்கு பொருத்தமில்லாத இரு அருள்கள் பற்றியா! என வினவினார்கள். அதற்கு : நீங்கள் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் அருள்களுடன் சேர்த்து அந்த மாபெரும் இரு அருள்கள் குறித்தும் விசாரிக்கப்பட உள்ளீர்கள் என்று பதிலளித்தார்கள்.