நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் ஆட்சித்தலைமைகளுக்கு கட்டுப்படாது, சட்டரீதியாக –ஏகோபித்து-தெரிவுசெய்யப்பட்ட ஒரு இமாமுக்கு –ஆட்சியாளருக்கு கீழ் உள்ள முஸ்லிம் கூட்டமைப்பிலிருந்து விலகி, அதே நிலையில், அதாவது குறித்த ஆட்சியாளரை விட்டு விலகி கட்டுப்படாத நிலையில் மரணித்தால் அறியாமைக்காலத்தில் மரணித்த ஒருவரின் நிலையிலேயே அவன் மரணிக்கின்றான் என்று கூறியுள்ளார்கள். சத்தியம், அசத்தியம் பற்றிய எவ்வித தெளிவுமின்றி வெறுமனே தனது கோத்திரம் , அல்லது இனத்திற்காக கோபம் கொண்டு மார்க்கத்திற்கோ, சத்தியத்திற்கோ உதவும் நோக்கமின்றி எந்த அறிவோ தெளிவோ இன்றி தனது இன மற்றும் குலத்திற்காக போராடி அதே நிலையில் மரணித்தாலும் அவரும் அறியாமைக் காலத்தில் மரணித்தவர் போன்றாவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள். முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஒருவர் புரட்சி செய்து, நல்லவர்கள், தீயவர்களை தாக்கி தான் செய்வதை பொருட்படுத்தாது ஒரு முஃமினை கொல்வதால் அவனுக்கு கிடைக்கும் தண்டனையை அஞ்சாது, முஸ்லிம் பிரதேசங்களில் ஒப்பந்த அடிப்படையில் வாழும் மாற்று மதத்தவர், அல்லது ஒப்பந்தம் செய்து ஏற்றுக் கொண்ட அதிகாரிகளின் ஒப்பந்தங்களை நிறைவேற்றாது அதனை முறித்து அனைவரையும் தாக்குவது பெரும்பாவங்களில் ஒன்றாகும். இவ்வாறு செய்பவன் மேற்படி கடுமையான எச்சரிக்கைக்கு உட்படுவான்.