மக்கா வெற்றிகொண்ட வருடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அவர்கள் கேட்டார்கள். நபியவர்கள் கூறினார்கள் 'நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், தானாக செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளார்கள் அப்போது : ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே !இறந்த விலங்குகளின் கொழுப்பை விற்பது அனுமதிக்கப்பட்டதா? ஏனெனில் அதன்மூலம் கப்பல்களுக்கு முலாம் பூசப்படுகிறது, தோல்களுக்கு மெருகேற்றப் படுகிறது. மக்கள் அதன்மூலம் விளக்கேற்று கிறார்கள். அதற்கு நபியவர்கள் 'இல்லை' அதனை விற்பது ஹராமாகும் என்றார்கள். அதனைத் தொடர்ந்து நபியவர்கள் ' யூதர்களை அழித்து நாசமாக்குவானாக! விலங்குகளின் கொழுப்பை ஹராமாக்கியபோது அதனை அவர்கள் உருக்கி பின் அதன் எண்ணையை விற்று அதன் கிரயத்தை உண்டனர்.' என்று கூறினார்கள்.