நபி ஸல் அவர்கள் பல்லியைக் கொல்லுமாறு இந்த ஹதீஸில் கட்டளையிட்டுள்ளார்கள்.இப்ராஹீம் நபி அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது அந்நெருப்பின் தீச்சுவாளை கடுமையாக எரிய வேண்டும் என்பதற்காக பல்லி ஊதிக்கொண்டிருந்தது என்பதற்காக என நபி ஸல் அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த விடயம் தவ்ஹீத் வாதிகளுக்கும் அல்லாஹ்வை மட்டும் கடவுளாக தூய்மையாக ஏற்று வாழும் மக்களுக்கும் முழுமையான பகைமையை வெளிப்படுத்தும் ஒரு பிராணியாக பல்லி உள்ளது என்பதை இது காட்டுகிறது.