தனது நீர்தடாகத்தின் பாத்திரங்களின் எண்ணிக்கை வானத்தில் உள்ள உடுக்கள் மற்றும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சத்தியமிட்டுக் குறிப்பிட்டார்கள். அவைகள் சந்திரவெளிச்சமில்லாத நிலையில் வானத்தில் அவைகள் தோன்றும் சந்திர வெளிச்சம் நிறைந்த இரவுகளில் அதன் ஒளியின் காரணமாக அதனை பார்க்க முடியாது, அதே போல் முகில்கள் நிறைந்த நிலையிலும் இதனைக் காணமுடியாது காரணம் முகில்கள் நட்சத்திரங்கள் தெரிவதை தடுத்துவிடுகிறது. சுவர்கத்தின் பாத்திரத்தினால் நீர் அருந்துவோர் ஒரு போதும் தாகத்தை உணரமாட்டார்கள். அதுவே அவருக்கு ஏற்பட்ட இறுதி தாகமாக இருக்கும். அந்த தடாகமானது சுவர்கத்தின் சுனையிலிருந்து வளிந்தோடும் இரு அருவிகளாகும்.அதன் அகலமும் நீலமும் சமமானவை. தடாகமானது சதுர வடிவமானது.அதன் பரப்பளவானது ஷாம் தேசத்தில் உள்ள அம்மானுக்கும் ஷாம் தேசத்தின் புறத்தே அமைந்திருக்கும் பிரபல்யமான நகரான அய்லா வரையிலாகும். தடாகத்தின் நீர் பாலை விட வெண்மையாகவும், தேனை விட மிக சுவையானதாகவும் இருக்கும்.