இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து கூறினார்: 'அல்லாஹ்வின் தூதரே, -ஒருவிடயத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டி- எம்மில் ஒருவருக்கு இது போன்ற எண்ணங்கள் ஏற்படுகின்றன - அவர் அது பற்றி பேசுவதை விட நெருப்புக் கனலாக இருக்க விரும்புகிறார்', அப்போது நபியவர்கள் 'அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்,ஷைத்தானின் சூழ்ச்சியை மனக்குழப்பமாக மாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறினார்கள். சரியானது - இமாம்களான அபூதாவூத், குப்ரா எனும் நூலில் நஸாஈ ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்
explain-icon

விளக்கம்

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து கூறினார்: 'அல்லாஹ்வின் தூதரே, - எம்மில் ஒருவருக்கு உள்ளத்தில் ஒரு வகையான எண்ணங்கள் ஏற்படுகின்றன.அது பற்றி பேசுவது மிகப்பாரதூரமானது.; அது பற்றி பேசுவதை விட நெருப்புக் கனலாக இருப்பதே மேல் என்று கூறுகிறார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரண்டு தடவைகள் தக்பீர் கூறி ஷைத்தானின் திட்டத்தை-சூழ்ச்சியை வெறும் மனஊசலாட்டமாக மாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் எனக் கூறினார்கள்.

explain-icon

ஹதீஸிலிருந்து பெறப்பட்ட சில பயன்கள்

  • ஷைத்தான், மனஊசலாட்டத்தின் மூலம் முஃமின்களை ஈமானிலிருந்து இறைநிராகரிப்பின் பால் மீட்டெடுக்க எப்போதும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தவனாக உள்ளான் என்பதை தெளிவுபடுத்தல்.
  • முஃமின்களுக்கு ஷைத்தானால் மனஊசலாட்டத்தை தவிர வேறு எதையும் செய்ய முடியாது என்ற ஷைத்தானின் பலவீனத்தை தெளிவுபடுத்துதல்.
  • முஃமினைப் பொறுத்தவரை ஷைத்தானின் ஊசலாட்டங்களை புறக்கணித்து அதனைத் தடுத்துக்கொள்ளுதல் அவசியமாகும்.
  • நல்ல விடயங்கள் அல்லது ஆச்சரியப்படத்தக்க விவகாரங்கள்,அல்லது இதையொத்த விடயங்களின் போது தக்பீர்முழங்குதல் அனுமதிக்கப்பட்டவிடயமாகும்.
  • மார்க்கம் குறித்து பிரச்சினைக்குரிய, தெளிவற்ற விடயங்கள் பற்றி ஒரு முஸ்லிம் அறிஞரிடம் கேட்டுத் தெளிவு பெறுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விடயமாகும்.
explain-icon

மேலதிக விபரங்களுக்கு