நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உபை இப்னு கஃபிடம் இறைவேதத்தில் உள்ள மிகவும் மகத்தான வசனம் எது என்று கேட்டபோது அவர் பதில் அளிப்பதற்கு தயங்கினார்.பின்னர் அவர் ' அந்த வசனம் ஆயதுல் குர்ஸி ' அல்லாஹு லாஇலாக இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம் எனக் கூறினார்.இதனை நபியவர்கள் உறுதிப்படுத்தியதோடு அவரின் உள்ளம் அறிவாலும் கல்விஞானத்தாலும் நிறைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி, இந்த அறிவினால் அவர் மகிழ்ச்சியடையவும் அதனை இலகுவாக்கிக் கொடுக்கவும் பிரார்த்தனை செய்தார்கள் .