ஒரு முஸ்லிமுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும்; வெகுமதியானது அவர் பிற முஸ்லிம்களுக்கு செய்யும் அதே வகையான செயல்களைப் போலவே இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். யார் இவ்வுலகில் ஒரு விசுவாசியின் துன்பம் மற்றும் கஷ்டத்தை நீக்குகிறாரோ, அவருக்கு அல்லாஹ் மறுமை நாளின் துன்பத்திலிருந்து நிவாரணம் அளிப்பான். மேலும்,யார் கஷ்டத்தில் உள்ள ஒருவரின் கஷ்டத்தை எளிதாக்கி, அவருடைய சிரமத்தை நீக்குகிறாரோ, அவருக்கு அல்லாஹ் இம்மை மறுமை விவகாரங்களை அவருக்கு இலகுபடுத்திக்கொடுப்பான் . ஒரு முஸ்லிமிடம் காணப்படுகின்ற பகிரங்கப்படுத்தப்படுவத்துவதற்கு அவசியமல்லாத குறைகள் மற்றும் தவறுகளை அறிந்திருப்பவர் அக்குறைகளை மறைத்தால் அல்லாஹ் அவருடைய குறைகளை இம்மையிலும் மறுமையிலும் மறைப்பான். இம்மை மறுமை நலன்களில், ஒரு அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்யும் காலமெல்லாம் அவ்வடியானுக்கு உதவி புரிபவனாக அல்லாஹ் இருக்கிறான். உதவி என்பது பிரார்த்தனை, உடல் ரீதியான மற்றும் பணரீதியான உதவி மற்றும் ஏனையவை இதில் உள்ளடங்கும். எவர் அல்லாஹ்வின் திருமுகம் நாடி மார்க்க அறிவைக் கற்கச் செல்கிறாரோ அதன் மூலம் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை இலகுபடுத்திக் கொடுக்கிறான். இறையில்லங்களில் ஒன்றில், ஒன்று சேர்ந்து, அல்லாஹ்வின் வேதத்தை ஓதி, தங்களுக்குள் அதை கற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்தாரின் மீது அமைதியும், பாதுகாப்பும் இறங்குவதோடு, அல்லாஹ்வின் அருளும், கருணையும் அவர்களைச் மூடிக்கொள்கிறது. மேலும் வானவர்கள் அவர்களைச் சூழ்ந்துகொள்வார்கள். அல்லாஹ் தனக்கு அருகில் இருப்பவர்களின் முன்னிலையில் அவர்களைப் பாராட்டுகிறான். இவ்வாறு அல்லாஹ் உயர்ந்த சபையில் அடியார்கள் பற்றிக் குறிப்பிடுவதே அவர்களின் சிறப்புக்கு போதுமானதல்லவா! நன்மையான செயல்கள் போதுமானதாக இல்லாத ஒருவர் நன்மையான செயல்களைச் செய்தவர்களின் தரத்திற்கு உயர்த்தப்பட மாட்டார். எனவே, அவர் தனது வம்சாவளி அந்தஸ்த்தையும்;;, தனது முன்னோர்களின் கௌரவத்தையும் நம்பி, நன்மையான செயல்களைச் செய்வதில் அலட்சியமாக இருக்கக் கூடாது.