நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது ஹதீஸை கேட்டு அதை நன்கு மனப்பாடம் செய்து, பிறரிடம் எடுத்து சொல்லுகிறவர்களுக்காக உலக வாழ்க்கையில் பசுமையும்; அழகும் மகிழ்ச்சியும் உண்டாக வேண்டும் என்றும், மறுமையில் சுவர்க்கத்தின் நறுமணமும் நலனும் பசுமையும் அவர்களுக்கு கிடைக்க அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என்றும் துஆ செய்தார்கள். ஏனெனில், ஒருவரிடம் ஹதீஸ் கொண்டு செல்லப்படும்போது, அதை கேட்கிறவர் அதை எடுத்துச் சென்றவரைவிட அதிகமாகப் புரிந்து கொள்ளக் கூடியவராகவும், ஆழமாக சிந்தித்து சட்டத் தீர்வுகளைப் பெறக் கூடியவராகவும் இருக்கலாம். இதனால், முதலாவது நபர் ஹதீஸைச் சரியாக மனப்பாடம் செய்து பரப்புவதில் திறமையுடையவராக இருப்பார்; இரண்டாவது நபர் அதை ஆழமாகப் புரிந்து அதிலிருந்து கருத்துகளை எடுத்துக்கொள்ளும் திறமையுடையவராக இருப்பார்.