ஸூறா பகராவின் இறுதி இரு வசனங்களை இரவில் ஓதியவரை அல்லாஹ் தீங்கு மற்றும் துரதிஷ்டவசமான விபத்து போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறான் என நபியவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள 'கபதாஹு' என்ற வாசகத்திற்கு பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அவை வருமாறு: இரவுத் தொழகைக்குப் பதிலாக இவ்விரு வசனங்களும் போதுமாகும். இரவில் ஓத வேண்டிய ஏனைய திக்ருகளுக்குப் பதிலாக இதுவொன்றே போதுமாகும். இரவுத் தொழுகையில் ஓத வேண்டிய அதி குறைந்த பட்ச அளவு இவ்விரு வசனங்களுடைய அளவாகும். குறிப்பிட்ட வார்த்தையானது மேற்கண்ட அனைத்து கருத்துக்களையும் உள்ளடக்கிக்கொள்ளவதற்கு வாய்ப்புண்டு.