நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களிடம் பின்வருமாறு கேட்டார்கள் : அதிபதியான அல்லாஹ்விடத்தில் அமல்களில் மிகவும் சிறந்ததும் உன்னதமானதும், மிகவும் அபிவிருத்திமிக்கதும், தூய்மை நிறைந்துமான ஒன்றை உங்களுக்கு சொல்லித்தருவதை நீங்கள் விரும்புகிறீர்களா? சுவர்க்கத்தில் உங்களின் அந்தஸ்த்தை மிகவும் உயர்த்தக் கூடியதும், தங்கம் வெள்ளியை தர்மம் செய்வததை விட மிகவும் நன்மையை பெற்றுத்தரக் கூடியதும்? போரில் காபிர்களை நேருக்குநேர் எதிர் கொண்டு, நீங்கள் அவர்களின் கழுத்தையும் அவர்கள் உங்களின் கழுத்தையும் வெட்டிவீழ்த்துவதை விடவும் மிகவும் சிறந்ததும் ஆகும், அதற்கு நபித்தோழர்கள் நாம் அதனை விரும்புகிறோம் என்றார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எல்லா நேரங்களிலும் அனைத்து நிலைகள் மற்றும் நிலமைகளிலும் அல்லாஹ்வை நினைவுகூர்வதாகும் என்றார்கள்.