அபூபக்கர் (ரழி) அவர்களிடம் ஹன்ளலா (ரழி) அவர்கள், தான் நபியவர்களிடம் சபையில் இருக்கும் நிலைக்கு மாற்றமாக தான் இருப்பதாக கூறினார்கள். அதாவது நபியவர்களிடத்தில் இருக்கும் வேளையில் அல்லாஹ்வை நினைவு கூர்பவராகவும் தமது பிள்ளைகள், பெண்கள் (மனைவிமார்களுடன்) உலக விவகாரகங்களிலும் கலந்து விடும்போது நிலை மாறிவிடுகிறது. எனவே இவ்வாறான நிலை மாற்றம் நயவஞ்கமாகும் என நினைத்தார்கள். உண்மையில் நயவஞ்சகம் என்பது உண்மை நிலையிலிருந்து வெளிப்படையில் வேறு ஒரு நிலையை பிரதிபலிப்பதாகும். இவ்விஷயத்தை நபி ஸல் அவர்களிடம் கூறிய போது "என்னுடன் இருக்கும் நிலையில் நீங்கள் எப்போதும் இருந்தால் உங்களுடன் எல்லா நிலைகளிலும் மலக்குமார்கள் கைலாகு செய்வார்கள். என்றாலும் இவ்விடயத்தில் நடு நிலையை கடைபிடிப்பது அவசியம். அதாவது அல்லாஹ்வுக்கென்று ஒரு சில நேரங்களை ஒதுக்குவதும், தனது குடும்பத்திற்காகவும் உலக விவகாரங்களுக்காகவும் இன்னும் சில நேரங்களை ஒதுக்குவதும் அவசியமாகும்." என்று கூறினார்கள்.