அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழு செய்யும் முறை பற்றி செயல்ரீதியாக விளக்குகிறார்கள். ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டுவருமாறு வேண்டினார்கள். முதலில் தனது இரு முன்னங்கைகளை கழுவினார்கள், பின்னர் பாத்திரத்தை சாய்த்து பாத்திரத்திற்கு வெளியே மூன்று முறை நீரை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தனது கையை பாத்திரத்தினுள் இட்டு மூன்று முறை தண்ணீரை அள்ளி வாய்கொப்பளித்து நாசுக்குள் நீறை செலுத்தி அதனை சிந்தினார்கள், பின் பாத்திரத்திலிருந்து நீரை அள்ளி தனது முகத்தை மூன்று தடவைகள் கழுவினார்கள். அதன் பின் நீரை அள்ளி தனது இரு கைகளையும் முழங்கைகள் வரை இரு முறை கழுவினார்கள். அதன் பின் தனது இருகைகளையும் பாத்திரத்தினுள் இட்டு இருகைகளாலும் தலையை தடவினார்கள் (மஸ்ஹ் செய்தார்கள்) அதாவது தலையின் முன்பகுதியிலிருந்து ஆரம்பித்து பிடரியின் மேல் பகுதி வரை கொண்டு சென்று ஆரம்பித்த இடம் வரை மீண்டு கொண்டு வந்தார்கள். கரண்டைக் கால் உட்பட தனது இரு கால்களையும் கழுவினார்கள்.