தான் யாரிடம் கொடியை கையளிக்கிறேனோ அவரின் மூலம் நாளை கைபர் யூதர்களை முஸ்லிம்கள் வெற்றிகொள்வார்கள் என ஸஹாபாக்களிடம் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அறிவிக்கிறார்கள். கொடி என்பது படையினர் தமக்கு அடையாளாமாக குறியீடாக எடுத்துக்கொள்ளும் ஒரு விவகாரமாகும். குறித்த நபரின் பண்புகளில் ஒன்று அவர் அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் நேசிப்பவர், அவரையும் அல்லாஹ்வும் அவனின் தூதரும் நேசிக்கின்றனர். இந்த மாபெரும் சிறப்பை அடைந்து கொள்ளும் ஆர்வம் கொண்டதினால் ஸஹாபாக்கள் யாவரும் இந்த கொடி யாரிடம் வழங்கப்பட உள்ளதோ என்ற பேச்சில் மூழ்கி இரவு முழுவதையும் கழித்தனர். அதிகாலையானதும் குறித்த இம்மாபெரும் சிறப்பை அடைந்து கொள்ளவதை எதிர்பார்த்து அவர்கள் அனைவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் சென்றனர். அப்போது நபியவர்கள் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப்பற்றி விசாரித்தார்கள் அதற்கவர்கள் அலி ரழி ஒரு நோயாளி அவர் கண்ணோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறினர். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அலி (ரழி) அவர்களை அழைத்துவர ஆட்களை அனுப்பினார்கள். அலி (ரழி) அவர்கள் வந்ததும் தனது புனித எச்சிலை அவரின் இரு கண்களிலும் துப்பி அவருக்காகப் பிராரத்தனை புரிய, அவரின் நோய் முழுமையாக குணமடைந்து விட்டது. அவ்வேளை அவரிடன் முஸ்லிம் சேனையின் கொடியை கொடுத்து, எதிரியின் கோட்டையையை மிகவும் மெதுவாக அனுகி அவர்களிடம் இஸ்லாத்தை முன்வைக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். அதற்கு அவர்கள் இணங்கி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு இஸ்லாத்தின் கட்டாயக் கடமைகளை அறிவித்துக்கொடுக்குமாறும் நபியவர்கள் கட்டளைப்பிரப்பித்தார்கள். பின்னர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறை அழைப்பணியின் சிறப்பு குறித்து குறிப்பிடுகையில், இறை அழைப்புப்பணியில் ஈடுபடுவர், ஒரு நபர்; நேர்வழி பெறக் காரணமாக இருப்பாராயின் அறபுகளின் செல்வங்களில் மிகவும் பெறுமதிக்க உயர்ந்த செல்வமான சிவப்பு ஒட்டகையை பெற்றிருப்பதை விட மிகவும் சிறந்தது. அதனை அவர் தனக்கு சொந்தமாக்கிக் கொள்வார், அல்லது அதனை ஸதகா தர்மம் செய்து விடுவார் எனத் தெளிவுபடுத்தினார்கள்.