நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நேர்ச்சை செய்வதை தடைசெய்தார்கள். நேர்ச்சை என்பது மார்க்கரீதியாக கட்டாயப்படுத்தாத ஒன்றை தான் செய்வதாக ஒருவர் தன்மீது கடமையாக்கிக்கொள்ளும் ஒரு விடயமாகும். தொடர்ந்து நபியவர்கள் குறிப்பிடுகையில் : நேர்ச்சையானது அல்லாஹ் விதித்த எதனையும் முற்படுத்தவோ பிற்படுத்தவோ மாட்டாது. மாறாக தனக்குத் தேவையானதை மாத்திரமே செய்யும் கஞ்சனின் செல்வத்தை மாத்திரமே அது வெளிப்படுத்துகிறது. மொத்தத்தில் நேர்ச்சையானது அல்லாஹ் ஏற்கனவே நிர்ணயித்த –விதித்தத் தவிர எதனையும் கொண்டு வரப் போவதில்லை.