வருடத்தில் ஏனைய நாட்களை விடவும் துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து நாட்களில் செய்யும் நல்லமல்கள் மிகவும் சிறப்புக்குரியது என நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். ஸஹாபாக்களிடம் அமல்களில் ஜிஹாதே மிகவும் சிறப்புக்குரிய அமல் -செயல் என்ற நிலைப்பாடு காணப்பட்டதினால் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் இந்த பத்து நாட்கள் அல்லாது வேறு நாட்களில் ஜிஹாத் செய்வது சிறப்புக்குரியதா அல்லது இந்த நாட்களில் நல்லமல்களில் ஈடுபடுவது சிறப்புக்குரியதா என வினவினார்கள்.அதற்கு நபியவர்கள்: இந்த நாட்களில் நல்லமல்களில் ஈடுபடுவது ஜிஹாதை விடவும் மிகவும் சிறப்புக்குரியது என பதிலளித்தார்கள். ஆனால் ஒரு மனிதரைத் தவிர, அவர் தனது உயிரையும் உடமைகளையும அல்லாஹ்வின் பாதையில் பணயமாக வைத்து போராளியாக வெளிக்கிளம்பிச் சென்று, தனது செல்வத்தையும், உயிரையையும் இழக்கிறார் என்றால் அந்த மனிதரைத் தவிர என்றும் கூறினார்கள். இந்த சிறப்பான நாட்களில் சிறப்புற்று விளங்கும் அமல்களில் இதுதான் மேலானது.