பொதுவாக வீர மரணமடைந்த ஷுஹதாக்கள் ஐந்து வகையினர்.அவர்களில் ஒருவர் கொள்ளை நோய் எனும் தொற்று நோயால் தாக்கப்பட்டவர்,இன்னொருவர் வயிற்று வழியால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்.மற்றுமொருவர் இஹ்ராம் உடையிலிருக்கும் முஹ்ரிமாகவன்றி கப்பல் பயணம் செய்து தண்ணீரில் மூழ்கி இறந்து போன சாதாரன பயணி,இன்னு மொருவர் கட்டிடம் போன்ற ஏதும் வீழ்ந்து அதில் சிக்குண்டு இறந்து போனவர்,மேலும் அல்லாஹ்வின் பாதையில் கொலை செய்யப்பட்டவருமாவார்.இவர்தான் ஷுஹதாக்களிடையே உயர்ந்த தரத்தை உடையவர்.மேலும் யுத்தமல்லாது அல்லாஹ்வின் வேறு பாதையில் மரணமடைந்தவனின் நிலையும் அதுவே.மேலும் முதலில் குறிப்பிட்ட நான்கு ஷுஹதாக்களும் மறுமையில் ஷுஹதாக்கள் என்ற பதவியைப் பெறுவர்.எனினும் அவர்கள் இவ்வுலகில் ஷுஹதாக்கள் என்ற சட்டத்திற்கு உட்பட மாட்டார்கள் எனவே அவர்களைக் குளிப்பாட்டுவதும்,அவர்களின் மீது தொழுகை நடாத்துவதும் அவசியம்.மேலும் ஹதீஸில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கை ஷுஹதாக்களை வரையரை செய்வதற்காகவன்றி பொதுவாகக் குறிப்பிட்டதாகும்.(அதாவது இது போன்று வேறு பல இடர்பாடுகளுக்கு ஆலாகி மரணமடைந்தவர்களும் ஷுஹதாக்களின் பட்டியலில் அடங்கவர்.)