நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இணைவைப்போடு சம்பந்தப்பட்ட சில விடயங்களை இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள் அவற்றுள் சில பின்வருமாறு: முதலாவது : மந்திரித்தல் : இணைவைப்பை உள்ளடக்கிய வார்த்தைகளின் மூலம் நிவாரணம் பெற வேண்டி ஜாஹிலிய்யா மக்கள் பயன்படுத்திய வாசகங்களை இது குறிக்கிறது. இரண்டாவது: மணிகள் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தாயத்துகள் : இவை குழந்தைகள் மற்றும் மிருகங்களை கண்திருஷ்டியிலிருந்து பாதுகாப்பதற்காக அணிவிக்கப்படுகின்றன. மூன்றாவது: திவலா, அதாவது கணவன் மனைவியருக்கிடையே பாசத்தை ஏற்படுத்து வதற்காக செய்யப்படுகின்ற ஒரு காரியத்தைக் குறிக்கும். மார்க்க ஆதாரங்களால் நிரூபிக்கப்பட்டோ, அனுபவ வாயிலாகவோ உணரப்பட்ட விடயம் அல்லாததாலும், வெறுமனே ஒரு பொருளை காரணமாக வைத்து அதில் நம்பிக்கை கொள்வதனாலும் இந்த விடயங்கள் யாவும் இணைவைத்தல் என்ற பாவத்தில் உள்ளடங்குகிறது. ஆனால் அல்குர்ஆன் ஓதுதல் போன்ற மார்க்கரீதியிலான வழிமுறைகள், அல்லது அனுப அறிவு வாயிலாக நிரூபிக்கப்பட்ட மருந்துகள் போன்ற கற்புலனாகும் வழிமுறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது அனுமதிக்கப் பட்டதாகும். ஆனால் அவை காரணகாரியங்கள் என்பதை ஏற்றுக்கொள்வதுடன் பயன் கிடைப்பதும் கிடைக்காதிருப்பதும் அல்லாஹ்விடம் உள்ள விடயம் என்பதையும் நம்ப வேண்டும்.