மேற்குறிப்பிட்ட ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உலக நெருப்பானது நரக நெருப்பின் எழுபது மடங்காகும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். மறுமையின் நெருப்பானது உலக வெப்பத்தை விட 69 மடங்கு வெப்பத்தால் அதிகமானதாகும்.அதில் உள்ள ஒவ்வொரு பகுதியும் உலக நெருப்பின் வெப்பத்திற்கு சமமானதாக இருக்கிறது. அல்லாஹ்வின் தூதரே! உலக நெருப்பானது நரகத்தினுள் நுழைவோரை வேதனை செய்வதற்கு போதுமானதாகும் என நபியவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.அவை ஒவ்வொன்றும் வெப்பத்தில் சமமானவையாகும்.