மறுமையில் தனது நீர் தடாகத்திற்கு நீர் அருந்த வருவோரை எதிர்பார்த்து காத்திருப்பதாக இந்த ஹதீஸில் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவுபடுத்துகிறார்கள். இதன் போது நபியவர்களின் முன்னே- அருகிலேயே சிலர் தடுக்கப்படுவார்கள் அப்போது நபியவர்கள் இறைவா! இவர்கள் என்னை சேர்ந்தவர்கள் எனது உம்மத்வர்கள் எனக் கூறுவார்கள். அவ்வேளை நபியவர்களின் புலம்பலுக்கு நீங்கள் அவர்களை விட்டு பிரிந்து சென்றதன் பின் என்ன செய்தார்கள் என்பது பற்றி உமக்குத் தெரியுமா? அதுதான் அவர்கள் தங்களது மார்க்கமான இஸ்லாத்தைத் துறந்து அவர்களின் பழைய வழியே சென்று விட்டனர்.ஆகவே அவர்கள் உம்மையோ உமது சமூகத்தையோ சார்ந்தோர் அல்லர் எனக் கூறப்படும்.