ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் கூறியதாக நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள் : யார் எனது நேசர்களில் ஒருவரை நோவினை செய்து அவரை கோபப்படுத்தி வெறுப்புக்குள்ளாக்குகிறாரோ நான் அவனுடனான எனது வெறுப்பை பகைமையை வெளிப்படையாக தெரிவித்துக்கொள்கிறேன். வலி என்பது இறையச்சமுடைய முஃமினை –நம்பிக்கையாளனை- குறிக்கும். ஓர் அடியானிடம்; காணப்படும் ஈமான் மற்றும் இறையச்சத்தின் அளவிற்கேட்ப அல்லாஹ்வின் நேசத்தைப் ஒருவன் அடைந்து கொள்கிறான். ஒரு முஸ்லீம் தனது இறைவனிடம் அவன் கட்டளையிட்டதையும் கடமையாக்கியதையும் செய்வதன் மூலமும், அவனுக்கு மிகவும் பிடித்தமான காரியங்களைச் செய்வதன் மூலமும்; தடை செய்யப்பட்டதைத் தவிர்ப்பதன் மூலமும் நெருங்குகிறான். அதே போன்று அவர் அல்லாஹ்வின் அன்பைப் பெறும் வரை, அவர் கடமையான செயல்களுடன்; நப்லான செயல்கள் மூலம் அவனை நெருங்குகிறான். எனவே அல்லாஹ் இவ்வாறான ஒரு முஸ்லிமை நேசித்துவிட்டால் அவனுடைய நான்கு உறுப்புகளையும் சரியான முறையில் பயன்படுத்துவதற்கு அவனுக்கு வழிகாட்டுவான். அவரது செவித்திறனை அல்லாஹ் விரும்பியதை மாத்திரம் செவிமடுக்க வழிகாட்டுவான் . அவர் தனது பார்வையை, அல்லாஹ் எதைப் பார்ப்பதை விரும்பி அதன் மூலம் திருப்தி அடைவானோ அவற்றை பார்ப்பதற்கு உதவி செய்வான். அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் விடயங்களை மாத்திரம் தனது கையால் செய்வதற்கு அவனது கைக்கு அல்லாஹ் வழிகாட்டுவான். மேலும் அவனது காலுக்கு வழிகாட்டுவது என்பது அல்லாஹ்விரும்புகின்ற செயலுக்காக மாத்திரம் நடந்து செல்லுதல் மற்றும் நன்மையான காரியத்திற்கு விரைந்து செல்வதைக் குறிக்கும். இவற்றுடன் அந்த அடியான் அல்லாஹ்விடம் எதையாவது கேட்டுப் பிரார்த்தித்தால்; அவன் கேட்டவற்றை அவனுக்கு அல்லாஹ் வழங்குவான். இந்த வகையில் துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அடியானாக அவன் இருப்பான். அதே போன்று ஏதாவது ஒரு தீங்கிலிருந்து தன்னை பாதுகாக்குமாறு கோரி பாதுகாப்புத் தேடினால் அவன் பயப்படுகின்ற தீங்குகளைவிட்டு அவனை அல்லாஹ் பாதுகாப்பான் பின் அல்லாஹ் கூறுகிறான்: ஓர் இறை நம்பிக்கையாளனிடத்தில் தனக்குள்ள கருணையின் காரணமாக அவனின்; உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. ஏனெனில் அவனோ அதில் சிரமம் இருப்பதினால் மரணத்தை வெறுக்கிறான். அல்லாஹ்வும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறான்.