ஒவ்வொரு விசுவாசியும் மறுமை நாளில் அல்லாஹ்வின் முன் தனித்து நிற்பார்கள் என்றும், அல்லாஹ்வும் அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் ஒரு பரிந்துரையாளரோ அல்லது மொழிபெயர்ப்பாளரோ இல்லாமல் அவனிடம் பேசுவான் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எமக்குத் தெரிவிக்கிறார்கள். அதனால் அவன் மிகுந்த பயத்துடன் தன் வலது பக்கத்தையும் இடது பக்கத்தையும் பார்ப்பான்; தனக்கு முன்பாக இருக்கும் நரகத்திலிருந்து தப்பிக்க ஏதாவது வழியைக் கண்டுபிடிக்க முடியுமா என்று அவன் ஆவலுடன் பார்ப்பான். அவன் தனது வலது பக்கம் பார்த்தால், தான்; செய்த நல்ல செயல்களைத் தவிர வேறு எதையும் காண மாட்டார். அவன் தனது இடது பக்கம் பார்த்தால், தான் செய்த கெட்ட செயல்களைத் தவிர வேறு எதையும் பார்க்க மாட்டார். அவன் தனக்கு முன்னால் பார்த்தால், நரகத்தைத் தவிர வேறு எதையும் அவன் காணமாட்டான், அதிலிருந்து அவன் விலகிச் செல்ல முடியாது ஏனென்றால் நரகத்திற்கு மேலே கட்டப்பட்ட ஸிராத் பாலத்தைக் கடப்பதைத் தவிர அவனுக்கு முன்னால் வேறு வழி இல்லை. பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உங்களுக்கும் நரகத்திற்கும் இடையில் நன்மை மற்றும் தர்மத்தின் ஒரு தடுப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அது அரை பேரீச்சம் பழம் போன்ற சிறிய ஒரு பொருளாக இருந்தாலும் சரியே!' என்று கூறினார்கள்.