மறுமையில் அல்லாஹ் சுவர்க்கவாசிகளைப் பார்த்து, சுவர்க்கவாசிகளே! என்று விழித்துப் பேசுவதாக இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்போது அவர்கள் எமது இரட்சகனே உமக்கு அடிபணிந்து உமது உதவியை நாடி நிற்கிறோம் என்று பதில் கூறுவார்கள். அப்போது அல்லாஹ் நீங்கள் திருப்தியுடன் இருக்கிறீர்களா? என்று கேட்க அதற்கவர்கள் ஆம்' நாம் திருப்தியுடன் உள்ளோம். என்று கூறுதுடன் உனது படைப்புகளில் எவருக்கும் கொடுக்காததை எமக்குக் கொடுத்திருக்கும் போது நாம் திருப்தியடையாமல் இருக்க எமக்கு என்ன நேர்ந்து விட்டது!? என்றும் கூறுவார்கள். அதனைத்தொடர்ந்து அல்லாஹ் அவர்களிடம் இதனை விடவும் மிகவும் சிற்புக்குரிய ஒன்றை தரட்டுமா? என்று கேட்பான். அதற்கு அவர்கள் இரட்சகனே! இதனைவிடவும் மிகவும் சிறப்புக்குரியது எது ? என்று அவர்கள் ஆச்சரியமாக கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் 'உங்கள்மீது என் நிலையான கருணையை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள்மீது கோபப்பட மாட்டேன்' என்று கூறுவான்.