நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது நபித்தோழர்களுக்கு, அமல் செய்யுமாறும், எல்லைமீறலோ, பொடுபோக்கோ இல்லாமல் இயன்றவரை அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுமாறும், தமது அமல்களில் உளத்தூய்மையையும் நபி வழிகாட்டுதலையும் பேணி, சரியானதைத் தேடிச் செய்து, ஒப்புக்கொள்ளப்பட்ட அமலாகவும் அதனை ஆக்கிக் கொள்ளுமாறும் தூண்டுகின்றார்கள். அப்போதுதான், அவ்வணக்கம் அவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் இறங்கக் காரணமாக அமையும். பின்பு, தமது அமல்களால் மாத்திரம் ஒருவர் தப்பிவிடமுடியாது. மாறாக, அல்லாஹ்வின் அருளும் அவசியம் என்பதையும் கூறுகின்றார்கள். அப்போது நபித் தோழர்கள், “உங்களையுமா? அல்லாஹ்வின் தூதரே! பிரமாண்டமான அளவுள்ள உங்களது அமலும் உங்களைக் காப்பாற்ற மாட்டாதா?” எனக் கேட்கின்றார்கள். அதற்கு நபியவர்கள், “நானும் தான்; அல்லாஹ் தனது அருளினால் என்னை மறைத்தாலே அன்றி (என்னால் தப்பமுடியாது)” என்று கூறினார்கள்.