நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் ஒரு முஃமின் ரோஷப்பட்டு கோபப்பட்டு வெறுப்பதை போன்று அல்லாஹவும் அவனின் கண்ணியம்,மகத்துவத்திற்கேற்ற நிலையில் ரோஷப்படுவதாகவும், கோபம் கொள்வதாகவும், வெறுப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். அல்லாஹ் ரோஷப்படுவதற்கான காரணம் ஒரு முஃமின் அவனின் மீது தான் ஹராமாக்கிய விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, களவு, மது அருந்துதல் போன்று மாபாதகச் செயல்களை செய்வதினாலாகும்.