நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹதீஸ்குத்ஸியில் அல்லாஹ் கூறியதாக அறிவிக்கிறார்கள்; ஆதமின் மகனே : நம்பிக்கை இழக்காது நீ என்னிடம் பிரார்த்தித்து எனது கருணையை எதிர்பார்த்திருக்கும் காலமெல்லாம் உனது பாவத்தை எவ்விதப்பொருட்படுத்தலுமின்றி மன்னிப்பேன் அந்தப் பாவம் அல்லது குற்றம் பெரும்பாவங்களில் ஒனறாக இருப்பினும் சரியே. ஆதமின் மகனே! உனது பாவம் வானம் பூமி நிறையும் அளவுக்கு அதிகமாக காணப்பட்டு அதற்காக என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அதன் அதிகத்தை பொருட்படுத்தாது உமது எல்லா பாவத்தையும் மன்னிப்பேன். ஆதமின் மகனே! நீ எதையும் இணைவைக்காத நிலையில் ஏகத்துவவாதியாக வாழ்ந்து, மரணித்த பின் இந்தப் பூமி நிறைய பாவங்களுடன் தவறுகளுடனும் வந்தாலும் உமது பாவங்களுக்கும் தவறுகளுக்கும் நிகராக இப்பூமி நிறைய மன்னிப்பை வழங்குவேன். ஏனெனில் நான் மன்னிப்பு வழங்குவதில் தயாளன். நான் இணைவைப்பைத் தவிர அனைத்து பாவங்களையும் மன்னிக்கிறேன்.