யார் எனது நேசர்களில் ஒருவரை நோவினை செய்து அவருக்கு கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறாரோ அவருக்குக்கு எதிராக எனது பகையை பகிரங்கமாக அறிவிக்கிறேன் என அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹதீஸ் குத்ஸியில் குறிப்பிடுகிறார்கள். 'வலி' என்பவர் இறையச்சமுள்ள முஃமினாவார். ஒரு அடியான் பெற்றிருக்கும் ஈமான் (இறைவிசுவாசம்) மற்றும் தக்வாவிற்கு (இறையச்சம்) ஏற்ப அவனுக்கு அல்லாஹ்வின் நெருக்கமும் நேசமும் கிடைக்கிறது. ஒரு முஸ்லிம் அல்லாஹ் மிகவும் விரும்புகின்ற அவன் கடமையாக்கி கட்டயாப்படுத்திய வணக்கங்களை செய்து, தடைசெய்யப்பட்ட செயல்களை தவிர்த்தல் மூலமேயன்றி அவன் வேறு எதன் மூலமும் அல்லாஹ்வுடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை . எப்போதும் ஒரு முஸ்லிம் பர்ழான கடமைகளுடன் உபரியான (நப்லான) வணக்கங்களை செய்வதன் மூலம் அல்லாஹ்வின் நேசத்தை அடைந்து கொள்ளும் வரை தனது இரட்சகனை நெருங்கிக் கொண்டிருக்கிறான். ஆகவே அல்லாஹ் அவனை நேசித்து விட்டால் குறிப்பிடப்பட்ட நான்கு உறுப்புகளினாலும் தான்விரும்பியவற்றை செய்வதற்கு வழிகாட்டுவான். அவரது செவித்திறனை அல்லாஹ் விரும்பியதை மாத்திரம் செவிமடுக்க வழிகாட்டுவான் . அவர் தனது பார்வையை, அல்லாஹ் எதைப் பார்ப்பதை விரும்பி அதன் மூலம் திருப்தி அடைவானோ அவற்றை பார்ப்பதற்கு உதவி செய்வான். அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் விடயங்களை மாத்திரம் தனது கையால் செய்வதற்கு அவனது கைக்கு அல்லாஹ் வழிகாட்டுவான். மேலும் அவனது காலுக்கு வழிகாட்டுவது என்பது அல்லாஹ் விரும்புகின்ற செயலுக்காக மாத்திரம் நடந்து செல்லுதல் மற்றும் நன்மையான காரியத்திற்கு விரைந்து செல்வதைக் குறிக்கும். இவற்றுடன் அந்த அடியான் அல்லாஹ்விடம் எதையாவது கேட்டுப் பிரார்த்தித்தால் அவன் கேட்டவற்றை அவனுக்கு அல்லாஹ் வழங்குவான். இந்த வகையில் துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அடியானாக அவன் இருப்பான். அதே போன்று ஏதாவது ஒரு தீங்கிலிருந்து தன்னை பாதுகாக்குமாறு கோரி பாதுகாப்புத் தேடினால் அவன் பயப்படுகின்ற தீங்குகளை விட்டு அவனை அல்லாஹ் பாதுகாப்பான்.