தனது அடியார்களின் தவ்பாவை –பாவமீட்சியை- அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். ஒரு அடியான் பகலில் ஒரு பாவத்தை –குற்றத்தை-செய்து இரவில் தனது பாவத்தை மன்னிக்குமாறு தவ்பா செய்தால் அவனது தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கொள்கிறான். ஒரு அடியான் இரவில் பாவமொன்றை செய்து பகலில் அதற்காக தவ்பா செய்தால் அவனின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் அடியார்களின் தவ்பாவினால் மகிழ்ச்சியடைந்து அதனை ஏற்றுக்கொள்ளும் முகமாக அவனின் கரத்தை நீட்டுகிறான். மேற்கிலிருந்து சூரியன் உதயமாகும் வரையில் தவ்பாவின் -பாவமீட்சிக்கான- வாயில் திறந்தே இருக்கும். இது உலக முடிவைக் குறிக்கும். மேற்கில் சூரியன் உதயமானால் தவ்பாவின் வாயில் மூடப்பட்டு விடும்.