ஒரு குழு நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அவர்களை அணுகியதும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரும்பாத சில வார்த்தைகளால் அவர்களைப் புகழ்ந்து கூறினார்கள். அவர்கள் நபியவர்களைப் பார்த்து: 'நீங்கள் எங்கள் எஜமானர்.' என்று கூறினார்கள் அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்: ''எஜமானன் அல்லாஹ்', எனக் கூறினார்கள். ஏனெனில் தனது படைப்பின் மீது முழு இறையாண்மை அவனுக்கே உள்ளது, ஆகையினால் அவர்கள் அவனுடைய அடிமைகளாவர். அவர்கள் மேலும் சொன்னார்கள்: நீங்கள் 'எங்களில் சிறந்தவர்' அதாவது பதவி, மரியாதை மற்றும் தகுதி ஆகியவற்றில் எங்களில் உயர்ந்தவர். அதாவது நீங்கள் எங்களில் ' தாராள மனப்பான்மை கொண்டவர் ' தாராளமாக கொடுப்பவர், உயர்ந்தவர் மற்றும் எங்களில் மிகவும் மதிப்புமிக்கவர். பின் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஷிர்க் (பல தெய்வ வழிபாடு) மற்றும் அதற்கு வழிவகுக்கும் காரணிகளான மிகைப்படுத்தல் மற்றும் எல்லை மீறல் போன்ற ஷைத்தானின் சூழ்சிகளுக்கு ஆட்படாமல் இருக்க, வலிந்து வார்த்தைகளைக் கூறாது சாதாரணமாக வார்த்தைகளைக் கூறி புகழுமாறு வழிகாட்டினார்கள்.