சத்தியத்தை விட்டு விலகி, நபியவர்களின் வழிமுறையை கடைப்பிடிக்காது நடந்தோரைத் தவிர மற்ற அனைவரும் தனது சமூகத்தில் சுவர்க்கம் செல்வார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீதிஸில் தெரிவிக்கிறார்கள். இவ்வாறு கூறியபோது ஸஹாபாக்கள், அல்லாஹ்வின் தூதரே! விலகிக்கொண்டோர், அல்லது தவிர்ந்து கொண்டோர் என்பவர்கள் யார்? என வினவினார்கள். உடனே அதற்கு யார் நபியவர்களுக்கு கட்டுப்பட்டு, அவரைப் பின்பற்றி ஒழுகுகிறாரோ அவர் சுவர்க்கம் செல்வார். யார் நபிவர்களுக்கு மாறு செய்து அவர் கொண்டுவந்த மார்க்க சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாது நடக்கிறாரோ அவர் தனது தவறான செயற்பாடுகளின் காரணமாக சுவர்க்கம் நுழைவதிலிருந்து விலகிக் கொள்வார் என நபியவர்கள் பதிலளித்தார்கள்.