அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தைகள் நான்கு என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். அவை பின்வருமாறு : முதலாவது : ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்) என்பது அல்லாஹ் அனைத்து வகையான குறைகளைவிட்டும் தூயவன் என்பதைக் குறிக்கும் இரண்டாவது : அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே): என்பது நேசிக்கவும், போற்றப்படவும் தகுதிவாய்ந்த பரிபூரணமான அல்லாஹ்வின் பண்பை இது குறிக்கிறது. மூன்றாவது : லாஇலாஹ இல்லல்லாஹ் : அதாவது உண்மையாக வணங்கப்படத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பது இதன் கருத்தாகும். நான்காவது: அல்லாஹு அக்பர் அதாவது (அல்லாஹ் மிகப்பெரியவன்) எல்லாவற்றையும் விடவும் கண்ணியமும் உயர்வும் தனித்துவமுமிக்கவன் என்பது இதன் கருத்தாகும். இந்த வார்த்தைகளின் சிறப்பிற்காககவும், அதன் நன்மைகளையும் அடையும் பொருட்டும் அவற்றை வரிசையாக சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.