இந்த மகத்தான வார்த்தைகளினால் அல்லாஹ்வை நினைவுகூர்வது உலகம் அதில் உள்ளவற்றைவிடவும் சிறந்தது என நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள் அந்த வார்த்தைகள் பின்வருமாறு : "ஸுப்ஹானல்லாஹ்" என்பது: (அல்லாஹ்வை தூய்மையானவன்) என்பது அனைத்துவகையான குறைகளைவிட்டும் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தலைக் இது குறிக்கிறது. 'அல்ஹம்து லில்லாஹ் என்பது : புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. போற்றி நேசம் கொள்வதற்குரிய நிறைவான பண்புகளின் மூலம் அல்லாஹ்வை பாராட்டி புகழ்தலைக் குறிக்கும். 'லாஇலாஹ இல்லல்லாஹு' என்ற வார்த்தை உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாறுமில்லை என்பதைக் குறிக்கும். "அல்லாஹு அக்பர்" என்பதன் கருத்து அவன் எல்லா அம்சங்களையும் விட போற்றவும் பெருமைப்படுத்தவும் மிகவும் தகுதியானவன்.