நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களுக்கு மிகப் பெரும்பவாங்கள் குறித்து தெரிவித்தார்கள். அதில் அவர்கள் மூன்று பாவங்கள் குறித்து பிரஸ்தாபித்தார்கள் அவை பின்வருமாறு: முதலாவது அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் : அதாவது வணக்க வழிபாடுகளின் வகைகளுள் ஏதாவது ஒன்றை அல்லாஹ் அல்லாத ஒன்றிற்கு சமர்பித்தல்.மேலும் அல்லாஹ்வின் இறைமைத்துவம் (உலூஹிய்யா) , ருபூபிய்யா மற்றும் அவனின் திருநாமங்கள் பண்புகளில் அல்லாஹ்வை அல்லாஹ் அல்லாதவற்றுடன் நிகராக்குதல் போன்றவற்றை இது குறித்து நிற்கிறது. இரண்டாவது : பெற்றாருக்கு நோவினை செய்தல் என்பது சொல் மற்றும் செயல் ரீதியான அனைத்து விடயங்கள் மூலமும் பெற்றோரை துன்புறுத்துவதையும் அவர்களுக்கு உபகாரம் செய்யாதிருத்தலையும் குறிக்கிறது. பொய் பேசுதல் என்பதில் பொய் சாட்சியம் கூறுவதும் அடங்கியுள்ளது. பொய்ச் பேசுதல் என்பது : ஒருவருடைய பொருளாதாரத்தை உரிமையின்றி சுரண்டுவதற்காகவோ, அவருடைய மானத்தில் அத்துமீறுவதற்காகவோ பொய்யாக சோடிக்கப்பட்ட அனைத்து வித வார்த்தை களையும் உள்ளடக்குகின்ற ஒரு பொதுவான சொற் பிரயோகமாகும். பொய் பேசுதல் ஒரு அசிங்கமான விடயம் மற்றும் அது சமூகத்தில்; மோசமான தாக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தவே நபியவர்கள் பல முறை எச்சரித்து இவ்வார்த்தையைக் குறிப்பிட்டார்கள். இவ்வாறு பல முறை சொல்வதைக் கேட்ட ஸஹாபாக்கள் நபியவர்கள் மீது கொண்ட பரிவினாலும், அசௌகரியம் ஏற்படக் கூடாது என்பதனாலும் நபியவர்கள் இதனைக் கூறுவதை நிறுத்த மாட்டார்களா என அவர்கள் தங்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டார்கள்.