சாபமிடுவதற்கு எவ்விதத்திலும் தகுதியற்றவர்களுக்கு அடிக்கடி சாபமிடுபவர் இருவகையான தண்டனைக்கு உட்படுகிறார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். முதல் தண்டனை, அடிக்கடி சாபமிடுபவர் கியாமத் நாளில் நபிமார்கள் தங்கள் சமூகங்களுக்கு அல்லாஹ்வின் செய்தியை எடுத்துச் சென்றதைப் பற்றி சாட்சியாக இருக்க மாட்டார். மேலும், அவனது சாட்சி உலக வாழ்க்கையிலும் ஏற்றுக் கொள்ளப்படாது, ஏனெனில் அவன் பாவநடத்தை (ஃபிஸ்க்) உடையவனாகக் கருதப்படுவான். அதேபோல், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டு ஷஹீதாகும் சிறப்பும் அவனுக்கு வழங்கப்படாது. இரண்டாம் தண்டனை : அவன் கியாத் நாளில், நம்பிக்கையாளர்கள் (முஃமின்கள்) நரகத்தைச் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ள தங்கள் சகோதரர்களுக்காக பரிந்துரை செய்யும் போது, அவர்களுடன் சேர்ந்து பரிந்துரை செய்ய முடியாது.