நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை தம் தோழர்களிடம், 'வங்குரோத்துக்காரன்; யார் என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'நம்மில் செல்வமோ சேமிப்புகளோ இல்லாதவர்கள் வங்குரோத்துக்காரர்களாக கருதப்படுகிறார்கள்' என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எனது உம்மத்தில் வங்குரோத்துக்காரன் (திவாலானவர்) என்பவர், மறுமை நாளில் தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற பல நல்ல செயல்களுடன் வருபவர் ஆவார்.' ஆனால் அவர் பலரை கெட்ட வார்த்தைகளால் அவதூறாகவும், அவமதித்தும் பேசியிருப்பார்;.பிறருடைய மானத்தை பங்கப் படுத்தியிருப்பார், பிறருடைய செல்வத்தை விழுங்கி அவர்களின் உரிமைகளை மறுத்திருப்பார், பிறருடைய இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்கு எதிராக அநீதி இழைத்திருப்பார், ஒருவரை அடித்து அவமானப்படுத்தியிருப்பார். இவ்வாறான ஒருவரின் நன்மைகள் அநீதிக்கு உள்ளானோருக்கு பகிர்ந்தளிக்கப்படும் பிறரின் உரிமை மீறலுக்கும் அநீதங்களுக்களுக்கான பிரதீயிடுகளும் நிறைவேற்றப்படும் முன்னர் அவரின் நன்மைகள் (நற்காரியங்ள்) முடிந்து விட்டால் அநீதிக்குட்பட்டோரின் தீமைகள் யாவும் அவரின் மீது சுமத்தப்பட்டு அநியாயக்காரர்களின் ஏட்டில் பதியப்பட்டு எந்த நன்மையுமில்லாதவராக பின்னர் அவர் நரகத்தில் தள்ளப்படுவார்.'