நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்களை நோக்கி உரையாற்றும்போது வுழுவின் இரண்டு மிகப்பெறும் சிறப்புகளை குறிப்பிட்டார்கள்: முதலாவதாக: நபிகளார் காட்டித்தந்த முறையில் யார் முறையாக, முழுமையாக, நிறைவாக, மற்றும் சரியான முறையில் ஒவ்வொரு உறுப்புக்கும் உரிய அளவு தண்ணீ எடுத்து வுழூச் செய்து, பின்னர், أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُولُهُ (அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும், முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்,) என்று கூறினால் சொர்க்கத்தின் எட்டு வாயில்களும் அவருக்காகத் திறக்கப்படும். அவர் எந்த வழியாக வேண்டுமானாலும் நுழையலாம். இரண்டாவது: யார் மேற்கூறப்பட்ட முறையில் பரிபூரணமாக வுழுவைச் செய்துவிட்டு, பின்னர் இரண்டு ரக்அத்களைத் இஹ்லாஸுடன் -மனத் தூய்மைப் பேணி உள்ளமும் உடலின் அனைத்து உறுப்புகளும் அல்லாஹ்வுக்கு முற்றும் முழுவதுமாக பணிந்த நிலையில் தொழுதால், அவருக்கு நிச்சயம் சொர்க்கம் கிடைக்கும்.